ஜிம்மில் நடனமாடியபோது- திடீரென சரிந்து உயிரிழந்த பிரபல தொழிலதிபர் -நமக்கே மரண பயம் காட்டும் காட்சி
மகாராஷ்ட்ராவில், உடற்பயிற்சிக்கூடத்தில் நடனமாடிக் கொண்டிருந்த தொழிலதிபர், திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். சத்ரபதி சம்பாஜிநகரில் உள்ள ஜிம்மில் சிலர், ஜூம்பா நடனமாடிக் கொண்டிருந்தனர். இதில், கவால்ஜித்சிங் என்பவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு கீழே விழுந்தார். இதையடுத்து, அங்கிருந்தவர்கள் அவரை, அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். எனினும் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். சம்பவம் குறித்த சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகியுள்ளன.
Next Story