கோர விபத்து.. சொகுசு காரில் எஸ்கேப்பான பாஜக தலைவர் மகன்.. விரட்டி பிடித்து மக்கள் தரமான சம்பவம்

x

மகாராஷ்டிரா பாஜக தலைவர் சந்திரசேகர் பவான்குலேவின் மகன் சங்கேத் பவான்குலேவுக்கு சொந்தமான சொகுசு கார் நேற்று நள்ளிரவில் நாக்பூரில் கட்டுப்பாட்டை இழந்து, இரண்டு கார்கள் மற்றும் ஒரு பைக் மீது மோதிவிட்டு தப்பிச் சென்றது.

பொதுமக்கள் சிலர் காரை துரத்தி சென்று மங்காபூர் பாலம்

அருகே தடுத்து நிறுத்தினர். காரில் சங்கேத் உள்ளிட்ட 5 பேர் இருந்த நிலையில், சங்கேத் உட்பட 3 பேர் தப்பியோடினர். கார் ஓட்டுநரும் மற்றொரு நபரும் கைது செய்யப்பட்டனர். இந்த விபத்தில் பைக்கில் சென்ற இருவர் படுகாயம் அடைந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்