இறந்த 2 மகன்களை 15 KM தோளில் சுமந்த தாய்,தந்தை - எதிர்கால வல்லரசு இந்தியாவையே உலுக்கிய ஒற்றை வீடியோ
ஒரே நேரத்தில் கண்முன்னே துடித்து உயிர் விட்ட 2 மகன்கள்...15 கி.மீ. தோளில் சுமந்து சென்ற தாய், தந்தை - எதிர்கால வல்லரசு இந்தியாவையே உலுக்கிய ஒற்றை வீடியோ
ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால் மகாராஷ்டிராவில் பெற்றோர் தங்கள் மகன்களின் சடலங்களை தோள்களில் சுமந்து சென்ற சம்பவம் நாட்டையே அதிர்ச்சி அடைய வைத்துள்ளது... இதுகுறித்த செய்தித் தொகுப்பைப் பார்க்கலாம்...
இறந்து போன மகன்களின் உடல்களை கனத்த மனத்துடனும்...கண்கள் நிறைய கண்ணீருடனும் பாவப்பட்ட பெற்றோர் சுமந்து செல்லும் பரிதாபகரமான காட்சிகள் தான் இவை...
மகாராஷ்டிர மாநிலம் அஹேரியைச் சேர்ந்த 10 வயதுக்கும் குறைவான 2 சிறுவர்கள் கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உடல்நிலை மோசமாகி மருத்துவமனை கொண்டு செல்லப்பட்ட நிலையில்...சரியான நேரத்தில் சிகிச்சை கிடைக்காததால் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்...
இந்நிலையில் மருத்துவமனையில் இருந்து 15கிமீ தொலைவில் உள்ள தங்கள் கிராமமான Pattigaon-க்கு பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் உடல்களை தோளில் சுமந்து கொண்டு சேறும் சகதியுமான மோசமான பாதையில் கண்ணீருடன் கடந்து வந்தனர்...
இதேபோல் கடந்த 1ம் தேதி தஹேந்திரி கிராமத்தைச் சேர்ந்த கர்ப்பிணி பழங்குடிப் பெண் ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால் வீட்டிலேயே குழந்தையை பெற்றெடுத்து... உடல்நிலை மோசமாகி...தாமதமாக மருத்துவமனை கொண்டு சென்று சிகிச்சை பலனின்றி தாயும் சேயும் உயிரிழந்தனர்...
ஒரு வாரத்திற்குள் 2 சம்பவங்கள் இதேபோல் அரங்கேறியுள்ள நிலையில் மகாராஷ்டிர சுகாதாரத் துறை மீது எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன...
சாலை வசதி...மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் அப்பாவி உயிர்கள் அடுத்தடுத்து பறிபோவது மகாராஷ்டிராவை கலங்கச் செய்துள்ளது...