நாக பாம்பு கடித்ததால் பறிபோன பிரபல பாம்பு பிடி வீரர் உயிர் - வைரலாகும் வீடியோ
மகாராஷ்டிரா மாநிலம் கோண்டியா நகருக்கு அருகிலுள்ள புல்சூரைச் சேர்ந்த 44 வயதான பாம்பு பிடிப்பாளர், நாகப் பாம்பு கடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இறந்தவர் சுனில் நாக்புரே என அடையாளம் காணப்பட்டார். கோண்டியாவின் கரஞ்சாவில் உள்ள ஒரு வீட்டில் நாகப் பாம்பு காணப்படுவதாக சுனில்க்கு அழைப்பு வந்தது. பாம்பை பிடித்து பையில் வைக்க முற்பட்ட போது, நாகப் பாம்பு தப்பி ஓடி அவரது கையில் கடித்தது. மாவட்ட பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி சுனில் விஷம் தாக்கி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
Next Story