சிறுமிகளை சிதைத்த கொடூரம்- சூறையாடப்பட்ட பள்ளி... கொதிப்பில் மக்கள்... மராட்டிய அரசு அதிரடி உத்தரவு

x

தானே தனியார் மழலைப் பள்ளியில் 4 வயது சிறுமிகள் இருவருக்கு அங்கு பணியாற்றிய தூய்மை பணியாளர் பாலியல் தொல்லை கொடுத்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுமிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் அளிக்கப்பட்டதை கண்டித்து போராட்டம் நடத்திய மக்கள் பள்ளியை சூறையாடினர். போராட்டம் தீவிரமாகி வரும் வேளையில், விவகாரம் குறித்து விசாரிக்க மூத்த ஐபிஎஸ் அதிகாரி ஆர்த்தி சிங் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் யாரும் தப்பிக்க முடியாது என கூறியிருக்கும் மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, குற்றவாளிக்கு கடுமையான தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும், விரைவு நீதிமன்றத்தில் வழக்கை துரிதப்படுத்தும்படி காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்