"இந்தியா ஒழிக, பாகிஸ்தான் வாழ்க"- தேசத்தை தரக்குறைவாக பேசிய இளைஞர்.. நீதிமன்றம் செய்த தரமான செயல்
மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில், ஃபைசான் என்பவர், இந்தியா ஒழிக என்றும் பாகிஸ்தான் வாழ்க என்றும் கோஷங்களை எழுப்பினார். இந்நிலையில், சமூக நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒற்றுமைக்கு ஊறுவிளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதாகக் கூறி, ஃபைசானை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்நிலையில், ஃபைசானின் ஜாமின் மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம்,
மாதந்தோறும் 2 செவ்வாய்க்கிழமைகளில் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திடுவதுடன், தேசியக்கொடியை ஏற்றி வைத்து, 21 முறை பாரத மாதா வாழ்க என்று முழக்கமிட வேண்டுமென நிபந்தனை விதித்து ஜாமின் வழங்கியது.
இதனைத்தொடர்ந்து காவல்நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்ட ஃபைசான், நீதிமன்ற உத்தரவுப்படி தேசியக் கொடியை ஏற்றியதோடு, 21 முறை பாரத மாதா வாழ்க எனக் கூறி தேசியக்கொடிக்கு வணக்கம் செலுத்தினார்.
Next Story