முழுசா கலெக்டரே ஆகல அதுக்குள்ள இவ்வளவு ஆட்டமா? - தலைக்கனத்தில் ஆடிய பூஜாவின் அட்ராசிட்டி

x

யுபிஎஸ்சி தேர்வில் அகில இந்தியளவில் 821வது இடத்தைப் பெற்ற பூஜா கேத்கர் மகாராஷ்டிர மாநிலம் புனேவில் மாவட்ட உதவி ஆட்சியராக நியமிக்கப்பட்டார். இவர் பார்வை மற்றும் மனநலம் குறைபாடு உள்ளதாகக் கூறி யுபிஎஸ்சி தேர்வுக்காக சமர்ப்பித்த சான்றிதழில் குறிப்பிட்டிருக்கிறார்... ஆனால் இதை உறுதி செய்வதற்காக மேற்கொள்ளப்படும் கட்டாய மருத்துவ பரிசோதனைக்கு செல்ல 6 முறை மறுத்துள்ளார்... ஆனால் பரிசோதனை செய்யப்படாமலேயே எப்படி இவர் உதவி ஆட்சியராக நியமிக்கப்பட்டார் என தெரியவில்லை... மேலும் OBC இட ஒதுக்கீட்டில் அவர் பணியமர்த்தப்பட்ட நிலையில் இதுகுறித்தும் சந்தேகம் எழுந்துள்ளது... அத்துடன் பூஜா கேத்கர் புனேவில் உதவி ஆட்சியராக நியமிக்கப்பட்ட போதிலும், தனது சொந்த ஆடி சொகுசு காரில் பூஜா சைரனைப் பயன்படுத்தியுள்ளார்... விஐபி நம்பர் பிளேட்டுகள் மற்றும் மகாராஷ்டிரா அரசு என்ற பெயர் பலையையும் வைத்துள்ளார்... புனே கூடுதல் கலெக்டர் அஜய் மோரின் அலுவலகத்தை அவர் இல்லாதபோது பயன்படுத்தியது மட்டுமன்றி அவரின் பெயர்ப்பலகை மற்றும் பொருள்களை அகற்றியுள்ளார்.... புனே ஆட்சியர் சுஹாஸ் திவாஸ், மகாராஷ்டிர அரசின் தலைமைச் செயலாளருக்கு, பூஜா கேத்கரை பணியிட மாற்றம் செய்யக் கோரி கடிதம் எழுதியிருந்தார். இதையடுத்து அவர் வாஷிம் மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்... பூஜாவின் தந்தையான ஓய்வு பெற்ற நிர்வாக அதிகாரி தனது மகளுக்குத் தேவையானவற்றை செய்து தரும்படி அழுத்தம் கொடுத்ததாகத் தெரிகிறது...


Next Story

மேலும் செய்திகள்