அடுத்தடுத்து பண்டிகைகள்.. உச்சகட்ட பரபரப்பில் தேர்தல் வேலைகள்

x

மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலுக்கு, ஒரு லட்சத்து 186 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.

தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தலைமையிலான குழு, மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான முன்னேற்பாடு குறித்து, அரசியல் கட்சிகள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியது. இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ராஜீவ் குமார், மகாராஷ்டிரா சட்டப்பேரவையின் பதவிக்காலம் நவம்பர் 26ம் தேதி முடிவடைவதால், அதற்கு முன்பாக தேர்தல் நடத்த வேண்டும் என்றார். தீபாவளி, சத் பூஜா, தேவ் தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளை கருத்தில் கொண்டு தேர்தல் அறிவிக்க வேண்டும் என அரசியல் கட்சித் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்த‌தாக தெரிவித்தார். மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் ஒரு லட்சத்து 186 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்படும் என்ற ராஜீவ் குமார், வேட்பாளர்களின் குற்ற பின்னணியை அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.


Next Story

மேலும் செய்திகள்