பசு இறைச்சி வைத்திருந்த 11 வீடுகள் தரைமட்டமாக இடிப்பு.. ம.பி.யில் பேரதிர்ச்சி காட்சிகள்

x

பசு இறைச்சி வைத்திருந்த 11 வீடுகள் தரைமட்டமாக இடிப்பு.. ம.பி.யில் பேரதிர்ச்சி காட்சிகள்

மத்தியப்பிரதேசத்தில், சட்டவிரோத பசு இறைச்சி விவகாரத்தில், ஒருவரை போலீசார் கைது செய்தனர். பைன்வாஹி பகுதியில் அதிகாரிகள் நடத்திய சோதனையில், 11 பேரின் வீடுகளுக்கு பின்னால் 150-க்கும் மேற்பட்ட பசுக்கள் இறைச்சிக்காக கட்டப்பட்டிருந்தன. மேலும், குளிர்சாதன பெட்டியில் பசு இறைச்சி, தோல் எலும்புகள் இருந்தன. அவற்றை பறிமுதல் செய்த போலீசார், பசுக்களை கோசாலைக்கு அனுப்பி வைத்து ஒருவரை கைது செய்தனர். எஞ்சிய 10 பேரை தேடி வருகின்றனர். மத்தியப்பிரதேசத்தில் பசுக்களை இறைச்சிக்காக கொல்வது 7 ஆண்டு வரை தண்டனைக்குரிய குற்றமாகும். இதனிடையே, சோதனை நடத்தப்பட்ட 11 வீடுகளும் அரசு நிலத்தில் கட்டப்பட்டது உறுதியானதால் அவை இடிக்கப்பட்டன.


Next Story

மேலும் செய்திகள்