அடிக்கடி திருடுபோகும் பூண்டு.. விவசாயிகள் கையில் எடுத்த புது யுக்தி

x

மத்தியப் பிரதேச மாநிலத்தில் பூண்டு விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இதனால், பூண்டு பயிரிடப்பட்டுள்ள வயல்களில், பூண்டு திருடு போகும் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இந்நிலையில், சிந்துவாரா பகுதியில் உள்ள விவசாயிகள், பூண்டு பயிர், அறுவடை, மூட்டையாக கட்டுதல் போன்ற அனைத்தையும் சிசிடிவி கேமராக்கள் அமைத்து விவசாயிகள் கண்காணித்து வருகின்றனர். சொந்தமாக சிசிடிவி கேமராக்களை வாங்க முடியாத விவசாயிகள், வாடகைக்கு சிசிடிவி வைத்து கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வீட்டில் இருந்தபடியே கண்காணிக்க முடியும் என்பதால், தங்களது வயலில் உள்ள பூண்டு பயிர், பாதுகாக்கப்படும் என்று விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்