மேட் இன் இந்தியா.. ரூ.2.23 லட்சம் கோடி செலவில் அப்டேட் ஆகும் இந்திய ராணுவம்

x

ரூபாய் 2.23 லட்சம் கோடி மதிப்பிலான ராணுவ தளவாடங்களை கொள்முதல் செய்ய, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான குழு ஒப்புதல் அளித்துள்ளது.

இந்திய ராணுவத்துக்கு ரூபாய் 2.23 லட்சம் கோடி மதிப்பிலான போர் விமானங்கள், டாங்கிகள், கவச வாகனங்கள் மற்றும் டாங்கி எதிர்ப்பு வெடிமருந்துகளை வாங்க தளவாட கொள்முதல் குழுமம் ஒப்புதல் அளித்துள்ளது. இதில் ரூபாய் 2.20 லட்சம் கோடி மதிப்பிலான தளவாடங்கள் உள்நாட்டு தொழில் நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, விமானப்படை மற்றும் ராணுவத்திற்கு இலகுரக போர் விமானம் மற்றும் ஹெலிகாப்டர்கள் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்திடமிருந்து வாங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய தளவாடங்களை உள்நாட்டு தொழில் நிறுவனங்களிடமிருந்து வாங்குவது உள்நாட்டு திறனை ஒரு புதிய உச்சத்திற்குக் கொண்டு செல்லும் என்றும், வெளிநாட்டு இறக்குமதியை சார்ந்திருப்பதை கணிசமாகக் குறைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்