இந்தியாவில் நுழைய அனுமதி மறுப்பு.. திருப்பி அனுப்பப்பட்ட லண்டன் எழுத்தாளர்
லண்டனைச் சேர்ந்த பிரபல இந்திய வம்சாவளி எழுத்தாளர் நிதாஷா கவுல் இந்த வார இறுதியில் காங்கிரஸ் தலைமையிலான கர்நாடக அரசாங்கத்தின் அரசியலமைப்பு தொடர்பான சர்வதேச மாநாட்டில் பங்கேற்பதற்காக பெங்களூரு விமான நிலையம் வந்தடைந்த நிலையில், அவர் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது... அனைத்து ஆவணங்களும் இருந்த போதிலும், ஜனநாயக மற்றும் அரசியலமைப்பு மதிப்புகள் பற்றி பேசியதற்காக இந்தியாவுக்குள் நுழைய தனக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த நிதாஷா, தனது பேனா மற்றும் வார்த்தையால் உலகின் மிகப்பெரிய ஜனநாயகம் எப்படி அச்சுறுத்தப்படுகிறது? என்றும், ஒரு பேராசிரியை மாநில அரசால் அழைக்கப்பட்ட அரசியலமைப்புச் சட்டம் குறித்த மாநாட்டில் பங்கேற்க மத்திய அரசு அனுமதிக்காதது ஏன்? எனவும் தனது எக்ஸ் தளத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.
Next Story