`நாளை நாடாளுமன்ற தேர்தல்' அனைத்தும் ரெடி.. நீங்க ரெடியா ? காலை 7மணி முதல் மாலை 6மணி வரை
வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி, மாலை 6 மணிக்கு முடிவடையும். 1 லட்சத்து 87 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் 16 கோடியே 63 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். 18 லட்சத்துக்கும் அதிகமான பணியாளர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர். 41 ஹெலிகாப்டர்கள், 84 சிறப்பு ரயில்கள் மற்றும் 1 லட்சம் வாகனங்கள் வாக்குச் சாவடி மற்றும் பாதுகாப்புப் பணியாளர்களுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளன. 50 விழுக்காட்டுக்கும் அதிகமான வாக்குச் சாவடிகளில் வெப்காஸ்டிங் செய்யப்படும். அனைத்து வாக்குச் சாவடிகளிலும் மைக்ரோ அப்சர்வர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். 167 செலவின பார்வையாளர்கள் உட்பட 361 பார்வையாளர்கள் தேர்தல் பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.
4 ஆயிரத்து 627 பறக்கும் படைகள், 5 ஆயிரத்து 208 புள்ளியியல் கண்காணிப்பு குழுக்கள், 2 ஆயிரத்து 28 வீடியோ கண்காணிப்பு குழுக்கள் மற்றும் ஆயிரத்து 255 வீடியோ ஆய்வு குழுக்கள் 24 மணி நேரமும் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளன. 14 லட்சத்திற்கும் அதிகமான 85 வயதிற்கு மேற்பட்டோர், 13 லட்சத்து 89 ஆயிரம் மாற்றுத்திறனாளிகள் வீட்டில் இருந்தபடியே வாக்களிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் வாக்குச்சாவடிக்கு செல்ல முடிவு செய்தால், பிக் அண்ட் டிராப் வசதிகளும் வழங்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.