நெஞ்சை கிழித்த சத்தம்... `கண் முன் சிதறிய மலை'... உயிரை கையில் பிடித்து ஓடும் அதிர்ச்சி காட்சி

x

உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் செலாங் கிராமத்தில் உள்ள ஹெலாங்-மார்வாரி பைபாஸ் சாலையில் அபாயகரமான நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

ஊழியர்கள் சிலர் இங்கு கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த போது மலைப்பகுதியில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது. உடனே ஊழியர்கள் தங்களை தற்காத்துக் கொள்ள அந்த இடத்தை விட்டு தலைதெரிக்க ஓடினர். கடந்த 12 ம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவின் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. மலைகளை உடைக்க டைனமைட் போன்ற வெடி பொருட்கள் பயன்படுத்தப்படுவதாலேயே இத்தகைய நிலச்சரிவுகள் ஏற்படுவதாக பொது மக்கள் கூறுகின்றனர். இல்லை எனில் கனமழை இல்லாத போதும் இத்தகைய நிலச்சரிவுகள் ஏன் ஏற்படுகின்றன என கேள்வி எழுப்புகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்