5 ரூபாய் குர்குரேவால் பிரிந்த குடும்பம்.. "இப்படியும் சண்டை வருமா?" | Kurkure | Thanthitv

x

ஆக்ராவைச் சேர்ந்த அந்த தம்பதிக்கு கடந்த ஆண்டு திருமணம் நடந்துள்ளது. தினமும் அலுவலகம் முடிந்து வீடு திரும்பும் போது, மனைவி ஆசையாக சாப்பிடும் குர்குரே பாக்கெட்டை கணவர் வாங்கி வந்துள்ளார். ஒருநாள் அவர் மறந்து விட்டு வீட்டுக்கு வந்ததால், கோபமடைந்த மனைவி கேள்வி எழுப்ப, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, ஒரு கட்டத்தில் மனைவி தனது தாய் வீட்டுக்குச் சென்று விட்டார். ஒன்றரை மாதங்களுக்குப் பிறகு இருவரும் காவல் நிலையத்தை அணுகி புகார் கொடுத்தபோது, கணவர் உடல்ரீதியாக துன்புறுத்துவதாக மனைவி புகார் கொடுத்துள்ளார். அதற்கு மறுப்பு தெரிவித்த கணவர், குர்குரே சாப்பிடும் பழக்கமுள்ள தனது மனைவி, ஒருநாள் வாங்கி வராததால் சண்டை போட்டுக் கொண்டு பிரிந்து சென்றதாக கூறியுள்ளார். இந்த வழக்கு குடும்ப நல மையத்துக்கு மாற்றப்பட்டு, அங்கு முதல் கட்டமாக இருவருக்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்த குடும்ப நல ஆலோசகர், அந்த பெண்ணுக்கு குர்குரே மீதான அதீத நேசம்தான் பிரச்சனைக்கு காரணம் என்று கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்