"குக்கி, மைத்தேயி சமூக பெண்களை எம்.பி-ஆக நியமிக்க வேண்டும்" - இந்தியா கூட்டணி கோரிக்கை

x

மணிப்பூரில் குக்கி - மைத்தேயி உள்ளிட்ட 2 சமூகங்களை சேர்ந்த பெண்களை மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்க வேண்டும் என குடியரசுத் தலைவரிடம் எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.

மணிப்பூரில் நிலவும் சூழல், அங்கு அமைதியை நிலைநாட்ட மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து

இந்திய கூட்டணியை சேர்ந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தலைமையில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்து மனு அளித்தனர். தொடர்ந்து நடந்த செய்தியாளர் சந்திப்பில், பிரதமர் மோடி மணிப்பூருக்கு சென்று அங்கு அமைதியை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே தங்கள் கோரிக்கை என மல்லிகார்ஜுன கார்கே குறிப்பிட்டார்.

மணிப்பூர் விவகாரத்தில் குடியரசுத் தலைவர் தலையிட்டு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என எதிர்கட்சிகள் வலியுறுத்தி உள்ளதாக குறிப்பிட்ட அவர், மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்த குக்கி மற்றும் மைத்தேயி உள்ளிட்ட 2 சமூகங்களை சேர்ந்த பெண்களை மாநிலங்களவை உறுப்பினர்களாக குடியரசுத் தலைவர் நியமிக்க வேண்டும் எனவும், இது மணிப்பூர் மாநிலத்தில் பெண்களின் மீது இழைக்கப்பட்ட தீங்குகளை களைய உதவியாக இருக்கும் என்றும் வலியுறுத்தியதாக குறிப்பிட்டார். மேலும் எதிர்க்கட்சிகள் குழுவினர் ஹரியானா மாநிலத்தின் நடைபெறும் வன்முறை குறித்தும் குடியரசுத் தலைவரிடம் எடுத்துரைத்ததாக மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்