மிரட்டும் பறவை காய்ச்சல்... கோவையில் எடுக்கப்பட்ட அதிரடி ஆக்ஷன்
கேரளத்தில் பறவை காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவையில் உள்ள தமிழக-கேரள எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
ஆனைகட்டி, வாளையாறு, வேலந்தாவளம், மேல்பாவி, முள்ளி, உள்பட 12 சோதனை சாவடிகளில் சிறப்பு கால்நடை பராமரிப்பு குழுவினர் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். கேரளத்தில் இருந்து கோவைக்கு வரும் வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. மேலும் கேரளத்தில் இருந்து தமிழகத்திற்கு கோழி, வாத்துக்கள் கொண்டு வரும் வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றன
Next Story