நாட்டையே உலுக்கிய பெண் பயிற்சி டாக்டர் கொலை - வெளியான முக்கிய தகவல்
கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் கொல்லப்பட்ட வழக்கை சி.பி.ஐ விசாரித்து வருகிறது. இதுதொடர்பாக கொல்கத்தா ஆர்.ஜி. கர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முன்னாள் முதல்வர் சந்தீஷ் கோஷிடம் சி.பி.ஐ அதிகாரிகள் ஏற்கனவே 13 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில், 3வது கட்ட விசாரணைக்காக அவர் சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜராகியுள்ளார். இதனிடையே, பெண் மருத்துவர் கொல்லப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சஞ்சய் ராயிடம் உளவியல் சோதனையை சி.பி.ஐ. தொடங்கியது. சி.பி.ஐ.யின் 5 நிபுணர்கள் கொண்ட குழு இந்த சோதனையை நடத்தி வருகிறது.
Next Story