கொல்கத்தா பெண் டாக்டர் பாலியல் விவகாரம் - கண்சிவந்து மம்தா எழுதிய லெட்டர்
கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் கொலைக்கு நீதி கேட்டு தொடர் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், மம்தா பானர்ஜி மீண்டும் கடிதம் எழுதியுள்ளார். கடந்த 22ஆம் தேதி எழுதிய கடிதத்தை மேற்கொள்காட்டி எழுதியுள்ள அவர், பிரதமர் மோடி எந்த பதிலையும் அளிக்கவில்லை என்றும், மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அமைச்சர் பதிலளித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். அந்த கடிதத்திலும், இந்த பிரச்சனையின் தீவிர தன்மை போதிய அளவில் கவனத்தில் கொள்ளப்படவில்லை என்று வேதனை தெரிவித்துள்ளார். பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை போன்ற கொடூர குற்றங்களுக்கு கடும் தண்டனை வழங்கும் வகையில் மத்திய அரசு சட்டம் இயற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
Next Story