பற்றி எரியும் கொடைக்கானல் மலை? - சுற்றுலாப் பயணிகளுக்கு தடை
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல்மலை கிராமங்களான பூம்பாறை, மன்னவனூர், கூக்கால் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து 10வது நாளாக பற்றி எரியும் காட்டு தீயால், சுற்றுலாப் பயணிகள் மற்றும் கனரக வாகனங்கள் செல்ல 3வது நாளாக மாவட்ட ஆட்சியர் தடை விதித்துள்ளார். மலைபகுதிகளில் பற்றி எரியும் காட்டுத்தீ 80 சதவீதம் அணைக்கப்பட்டுள்ளதாகவும், அடுத்த 2 நாட்களில் காட்டுத்தீ முழுவதும் கட்டுப்படுத்தப்படும் என்றும் ஹெலிகாப்டர் மூலம் தீயை அணைக்க நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் மண்டல வனபாதுகாவலர் தகவல் தெரிவித்துள்ளார்.
Next Story