அமைதியாக இருந்து ஆட்டத்தை ஆரம்பித்து குலை நடுங்கவிட்ட நிபா வைரஸ்
மலப்புறம் மாவட்டம் திருவாலி பகுதியைச் சேர்ந்த 24 வயது இளைஞர் மூளைக்காய்ச்சல் அறிகுறியால் கோழிக்கோடு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் நிபா தொற்று உறுதி செய்யப்பட்டதாக, கேரள மாநில சுகாதாரத்துறை வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். உயிரிழந்த நபரின் வீடு அமைந்துள்ள பகுதியில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார். உயிரிழந்த நபருடன் தொடர்பில் இருந்ததாக 151 பேருடைய பட்டியல் தயார் செய்துள்ளதாகவும், தனிமையில் வைத்துள்ள 5 பேருக்கு நிபா அறிகுறி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். சுகாதாரத்துறையும், உள்ளாட்சித் துறையில் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவதாக வீணா ஜார்ஜ் கூறியுள்ளார்.
Next Story