20கிமீ க்கு... சிதறிய உடல்கள்... நடுங்கவிடும் ரத்த சகதி மண்ணுள் புதைந்த வயநாடு; வெளிவந்த உண்மைகள்

x

தலை, கை, கால்கள் - சிதறிய உடல்கள்...

20கிமீ க்கு... நடுங்கவிடும் ரத்த சகதி

மண்ணுள் புதைந்த வயநாடு; வெளிவந்த பகீர் உண்மைகள்

கேரளாவில் நிலச்சரிவில் பாதிக்கப் பட்டிருக்கும்

முண்டக்கையில் 40 ஆண்டுகளுக்கு பிறகு வரலாறு திரும்பியுள்ளது.

முண்டக்கையில் 48 மணி நேரத்தில் 572 மில்லி மீட்டர் மழை பெய்த வேளையில் கேரளா வரலாற்றில் காணாத பேரழிவு நிலச்சரிவை கண்டுள்ளது. 130 க்கும் அதிகமானோர் உயிரிழந்து நாட்டையே உலுக்கி உள்ளது. இங்கு 1984 ஜூலை 1 ஆம் தேதியும் நிலச்சரிவு ஏற்பட்டது. அப்போது 14 பேர் உயிரிழந்து உள்ளதாக அம்மாநில அரசு சட்ட பேரவையில் தெரிவித்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது 20 கிலோ மீட்டர் தொலைவில் சடலங்கள் சாலியாற்றில் மீட்கப்பட்டது போல் அப்போதும் 20 கிலோ மீட்டர் தொலைவில் 2 சடலங்கள் மீட்கப்பட்தாக 1984 ஜூலை 13 ல் அப்போதைய கேரள வருவாய் துறை அமைச்சர் பி. ஜே. ஜோசப் சட்ட பேரவையில் தெரிவித்தது உள்ளார்.

100-200 அடி அகலம் 10-50 அடி உயரம் என மூன்று மைல்கள் தொலைவு நீண்டு கிடக்கும் நிலச்சரிவு குப்பைகளில் இருந்து உடல்களை மீட்பது கடினம் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்தாகவும், அதனால் பூமியை குப்பயை அகற்றும் பணிகள் நிறுத்தப்பட்டது. தீயணைப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தியும் இறந்தவர்களின் உடல்களை கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் அவரது பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முண்டக்கையில் 2019 ஆம் ஆண்டும் ஒரு நிலச்சரிவு ஏற்பட்டு இருக்கிறது. ஆனால் அங்கிருந்து சில கிலோ மீட்டர் தொலைவில் புதுமலையில் பேரழிவு நிலச்சரிவு ஏற்பட்டதால், இங்கு நடந்து வெளியே தெரிய வரவில்லை. 2019 ஆகஸ்ட் 8-ல், இப்பகுதியில் 24 மணி நேரத்தில் 240 மிமீ மழை பெய்ததை தொடர்ந்து நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அப்போது முன் எச்சரிக்கையாக மக்க்கள் வெளியேறப்பட்டதால்பெரும் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டு வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவு எச்சரிக்கை மற்றும் தணிப்பு பற்ற

வழங்கப்பட்ட ஆய்வு அறிக்கையிலும் 1984 சம்பவம் விவரிக்கப்படுள்ளது. தேசிய புவி அறிவியல் ஆய்வு மையம் வயநாடு-கோழிக்கோடு எல்லைப் பகுதி மாநிலத்தில் நிலச்சரிவு ஏற்படக்கூடிய பகுதிகளில் ஒன்றாக அடையாளம் கண்டுள்ளது. இந்த எச்சரிக்கைகளுக்கு மத்தியில் கேரளா வரலாற்றில் காணாத பேரழிவு நிலச்சரிவு அங்கு ஏற்பட்டு இருக்கிறது...


Next Story

மேலும் செய்திகள்