தம்பி, தங்கையை கரையேற்றி தன் வாழ்வின் முதல் அடி வைத்ததுமே... மண்ணோடு புதைந்த அன்பு அண்ணன்

x

தம்பி, தங்கையை கரையேற்றி தன் வாழ்வின் முதல் அடி வைத்ததுமே மண்ணோடு புதைந்த அன்பு அண்ணன்

நிலைகுலைந்த தமிழ் குடும்பம்

கேரள நிலச்சரிவில் சிக்கி இறந்த தமிழ்நாட்டை சேர்ந்தவர்களின் சோக பின்னணியை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...

ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியுள்ளது கேரள மாநிலம், வயநாடு நிலச்சரிவு சம்பவம்..

ராட்சத நிலச்சரிவில் 3 கிராமங்கள் தடயமே இல்லாமல் உருக்குலைந்து கிடக்க நூற்றுக்கணக்கான உயிர்கள் மண்ணுக்குள் புதையுண்டன...

இதில் தமிழ்நாட்டை சேர்ந்த காளிதாஸ் என்பவரின் உயிரும் பறிபோயுள்ளது மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது..காரணம் அவரின் பின்புலம்...

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே புளியம்பாறை பகுதியில் வசிப்பவர் காளிதாஸ். 32 வயதாகும் இவர் திருமணம் செய்து கொள்ளாமல் தனது குடும்ப பாரத்தை சுமந்து வந்துள்ளார்.

குடும்பத்திற்காக உழைத்து உழைத்து, தங்கை மற்றும் தம்பிக்கு நல்லபடியாக திருமணம் செய்து வைத்த அவர், தன் திருமணத்திற்காக வீடு கட்டி வந்துள்ளார்.

80 சதவீதம் கட்டிட வேலைகள் முடிந்த நிலையில், வீடு கட்டுவதற்காக வாங்கிய கடனை அடைக்க கடந்த ஒரு வாரத்திற்கு முன் மேப்பாடி வேலைக்கு சென்றுள்ளார்.

இன்னும் இரண்டு நாட்களில் வீட்டிற்கு திரும்பி விடுவேன் என நம்பிக்கையோடு காளிதாஸ் தெரிவித்திருந்த நிலையில், வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் அவரின் நம்பிக்கை புதையுண்டது..

ஆம், நள்ளிரவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி மண்ணில் புதையுண்டு உயிரிழந்து விட்டார் காளிதாஸ்...


Next Story

மேலும் செய்திகள்