கேரளத்தை திருப்பிப்போட்ட இயற்கை.. அடுத்தகட்ட வேலையை தொடங்கிய மாவட்ட நிர்வாகம்

x

நிலச்சரிவால் உருக்குலைந்துள்ள கேரள மாநிலம், வயநாட்டில் உள்ள ரிசார்ட் மற்றும் விடுதிகளில் தங்கியிருந்த சுற்றலாப் பயணிகளின் விவரங்களை மாவட்ட நிர்வாகம் கணக்கெடுத்து வருகிறது.

வெளியூர்களில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளின் மனம் கவரும் இடமாக இருப்பது, கேரளாவில் உள்ள வயநாடு மாவட்டம்.

இயற்கை எழிலை கண்டு ரசிக்கவும், அட்வெஞ்சர் நிகழ்வுகளில் பங்கேற்கவும் வெளியூர்களில் இருந்து வந்த சுற்றுலாப் பயணிகள், வயநாட்டில் உள்ள ரிசார்ட்டுகளில் தங்கி இருந்தனர்.

இரு தினங்களுக்கு முன் நிலச்சரிவு ஏற்பட்ட பிறகு, 2 தனியார் ரிசார்டுகளில் தங்கியிருந்த 19 பேரை ராணுவத்தினர் பத்திரமாக மீட்டனர்.

இதேபோல், வயநாட்டை அடுத்த சூரல் மலை, முண்டகை, மேப்பாடி ஆகிய பகுதிகளில் ஏராளமான ரிசார்ட்டுகள் உள்ளன.

அந்த ரிசார்ட்டுகளில் தங்கியிந்த சுற்றுலாப் பயணிகள் மற்றும் உயிரிழந்த சுற்றுலாப் பயணிகளின் விவரங்களை போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்