கேரளாவை புரட்டிப்போட்ட நிலச்சரிவு.. முதுகலை நீட் தேர்வு திட்டமிட்டபடி நடைபெறுமா? தள்ளி வைக்கப்படுமா?
ஏற்கனவே மூன்று முறை தள்ளி வைக்கப்பட்ட முதுகலை நீட் தேர்வு வரும் 11ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அன்றைய தினம் தேர்வு நடைபெறுமா ? என்ற கேள்வி எழுந்துள்ளது.
வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் பணியில் ஆயிரத்து 500க்கும் அதிகமான மருத்துவர்கள் ஈடுபட்டு இருக்கின்றனர். இவர்களில் பலரும் முதுகலை நீட் தேர்வு எழுத உள்ளனர். தமிழகத்தில் 30 ஆயிரம் பேர் இந்த தேர்வை எழுத உள்ள நிலையில், 60 சதவீதத்திற்கும் அதிகமான தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவர்களுக்கு, தெலங்கானா, ஆந்திரா போன்ற அண்டை மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
Next Story