மண்ணுக்குள் புதைந்த முண்டக்கைமனிதர்கள் வாழ தகுதியற்றதா வயநாடு..?1984- கேட்டாலே நடுங்கும் கேரளா..?

x

இப்போது பேரழிவை சந்தித்திருக்கும் முண்டக்கையில், 1984 ஜூலை 1 ஆம் தேதியும் நிலச்சரிவு ஏற்பட்டிருக்கிறது. அப்போது 14 பேர் உயிரிழந்ததாக அம்மாநில அரசு சட்ட பேரவையில் தெரிவித்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது 20 கிலோ மீட்டர் தொலைவில் சடலங்கள் சாலியாற்றில் மீட்கப்பட்டது போல் அப்போதும் 20 கிலோ மீட்டர் தொலைவில் 2 சடலங்கள் மீட்கப்பட்தாக 1984 ஜூலை 13 ல் அப்போதைய கேரள வருவாய் துறை அமைச்சர் பி. ஜே. ஜோசப் சட்டபேரவையில் தெரிவித்தது உள்ளார். முண்டக்கையில் 2019 ஆம் ஆண்டும் ஒரு நிலச்சரிவு ஏற்பட்டு இருக்கிறது. ஆனால் அங்கிருந்து சில கிலோ மீட்டர் தொலைவில் புதுமலையில் 17 பேரை பலிகொண்ட நிலச்சரிவு ஏற்பட்டதால், இங்கு நடந்து பெரிதாக பேசவில்லை. 2019 ஆகஸ்ட் 8 ஆம் தேதி 240 மிமீ மழை பெய்ததை தொடர்ந்து நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. வீடுகள் அடித்துச் செல்லப்பட்டிருக்கிறது. அப்போது மதியம் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டதாக அப்பகுதி மக்களால் தெரிவிக்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்