சின்னாபின்னமான வயநாடு... களமிறங்கிய பெண்கள் ஆர்மி..! புதைந்த பூமியில் பூத்த புது நம்பிக்கை

x

கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தற்காலிக முகாமை சுற்றியுள்ள வீட்டுப் பெண்கள் ஒன்று சேர்ந்து சமையலுக்கு உதவி வருகின்றனர்... இந்த மனிதநேயமிக்க சம்பவம் குறித்து விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு...

ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து...உடைமைகளை இழந்து...உணவின்றி...வாழ வழியின்றி தவித்து வருகின்றனர்...

பணக்காரரோ... ஏழையோ...எல்லோரும் ஒன்றாகிப் போயினர் இந்த இயற்கைப் பேரிடர் முன்பு...

உயிர் பிழைத்தோர் பத்திரமாக மீட்கப்பட்டு தற்காலிக முகாம்களில் மாவட்ட நிர்வாகத்தால் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்குத் தேவையான உணவு, உடை, மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன...

"உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே..." என்பதைப் போல் பாதிக்கப்பட்ட மக்களுக்காக களமிறங்கியுள்ளனர் தன்னார்வலர்களும்...தொண்டு நிறுவனங்களும்...

தனியார் பள்ளியில் அமைந்துள்ள முகாம் தான் இது... நீ காய்கறி வெட்டு...நான் சமைக்கிறேன்...என்று இங்கு எறும்பைப் போல் சுறுசுறுப்பாக சமைத்துக் கொண்டிருக்கின்றனரே...இவர்கள் யார் தெரியுமா?...அரசாங்கப் பணியாளர்கள் அல்ல...எல்லோரும் இப்பள்ளியைச் சுற்றியுள்ள அக்கம்பக்கத்து வீட்டுப் பெண்கள்...

பசியால் வாடும் பாதிக்கப்பட்ட மக்களின் பசியாற்ற மும்முரமாக சமைத்து வருகின்றனர்...

"இட்டார் பெரியோர்" என்பதைப் போல் பசித்த வயிறுகளின் பசியாற்றும் இந்த அன்னபூரணிகள் மிகவும் பாராட்டப்பட வேண்டியவர்கள் என்பதில் சந்தேகமில்லை...


Next Story

மேலும் செய்திகள்