"ஊடகங்களுக்கு எதிரான அவதூறு வழக்கு" - கேரள உயர்நீதிமன்றம் அறிவுரை | Kerala High Court

x

"ஊடகங்களுக்கு எதிரான அவதூறு வழக்கு" - கேரள உயர்நீதிமன்றம் அறிவுரை | Kerala High Court

ஊடகங்கள் மற்றும் ஊடகப் பணியாளர்கள் மீதான அவதூறு வழக்குகளை பரிசீலிக்கும்போது விசாரணை நீதிமன்றங்கள் கவனமாக இருக்க வேண்டும் என கேரள உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

மலையாள மனோரமா நாளிதழின் நிர்வாக இயக்குனர், ஆசிரியர் மற்றும் நிருபர் மீது பதிவு செய்யப்பட்ட அவதூறு வழக்கை ரத்து செய்ய கேரள உயர்நீதிமன்றம் நடவடிக்கை எடுத்துள்ளது.

நீதிபதி ஏ பதருதீன் தலைமையிலான அமர்வு,

அவதூறு குற்றச்சாட்டின் பேரில் தொடங்கப்படும் தேவையற்ற சட்ட நடவடிக்கைகள், பத்திரிகை சுதந்திரத்தை பாதிக்கும் என்று கூறியுள்ளது.

ஊடகங்களுக்கு எதிரான வழக்கில் நடவடிக்கை எடுக்கும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும், நியாயமான அடிப்படைக் காரணிகள் பாதிக்கப்பட்டால் மட்டுமே வழக்குப் பதிவு செய்ய முடியும் என்றும் கேரள உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

பத்திரிக்கை சுதந்திரத்தை பாதிக்கும் வகையில் நடவடிக்கை எடுப்பது, தாக்குதல் நடத்தும் கும்பலை தைரியப்படுத்தவே செய்யும் என்றும்,

செய்திகளின் துல்லியத்தை அவதூறு என்று வரையறுப்பது பத்திரிகை சுதந்திரத்தை மீறுவதாகும் என்றும், . விசாரணை நீதிமன்றங்கள் ஊடக நிறுவனங்கள் மற்றும் ஊடக பணியாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் அமர்வு வலியுறுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்