"அமைச்சருக்கு கைகொடுத்த மாணவி".. வெறுப்பை தூண்டியவருக்கு ஓங்கி குட்டிய கேரள ஐகோர்ட்
எந்த மத நம்பிக்கையும் அரசியலமைப்பு சட்டத்தை விட உயர்ந்தது அல்ல என கேரள உயர்நீதிமன்றம் தெளிவுப்படுத்தியுள்ளது.
கோழிக்கோட்டில் நடந்த விழாவில் கலந்து கொண்ட கேரள நிதியமைச்சர் பாலகோபாலுக்கு முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த ஒரு மாணவி கை கொடுத்தார்.
இது ஷரியத் சட்டத்திற்கும், முஸ்லிம் மத நம்பிக்கைக்கும் எதிரானது என்று கூறி அப்துல் நவ்ஷாத் என்பவர் சமூக வலைதளங்களில் பதிவிட்டார்.
அந்த மாணவியின் புகாரின் அடிப்படையில், கலகத்தை ஏற்படுத்த முயற்சித்தது உள்ளிட்ட பிரிவுகளில் நவ்ஷாத் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி நவ்ஷாத் கேரள உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு, நீதிபதி குஞ்சிகிருஷ்ணன் முன்னிலையில்
விசாரணைக்கு வந்தது.
அப்போது நவ்ஷாத் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய முடியாது என்று கூறி அவரது மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
எந்த மத நம்பிக்கையும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை விட உயர்ந்தது அல்ல என்று நீதிபதி தெரிவித்தார்.