"இதே நிலை நீடித்தால்..." - கேரள அரசுக்கு ஐகோர்ட் இறுதி எச்சரிக்கை
மூணாறு நில ஆக்கிரமிப்பு தொடர்பான வழக்கின் விசாரணையை சிபிஐ வசம் ஒப்படைக்க நேரிடும் என கேரள அரசுக்கு மாநில உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. மூணாறு ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி தனியார் அமைப்பு தொடர்ந்த பொதுநல வழக்கை கேரள உயர்நீதிமன்றம் விசாரித்தது. ஆக்கிரமிப்பு, போலி ஆவணங்கள் குறித்து உயர் அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்து 20 ஆண்டுகளை கடந்தும் ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கை எடுக்கவில்லை என கண்டனம் தெரிவித்த உயர்நீதிமன்றம் இந்த வழக்கில் அரசு மெத்தனமாக இருப்பதாக விமர்சித்தது. இதே நிலை நீடித்தால், வழக்கின் விசாரணையை சிபிஐ வசம் ஒப்படைக்க நேரிடும் என கேரள அரசை உயர்நீதிமன்றம் எச்சரித்தது.
Next Story