பயங்கரமாய் பரவும் பல வகை காய்ச்சல்கள்..ஒரே நாளில் 11 பேர் பலி.. அபாயத்தில் 12,200 பேர்
பயங்கரமாய் பரவும் பல வகை காய்ச்சல்கள்..ஒரே நாளில் 11 பேர் பலி.. அபாயத்தில் 12,200 பேர் - நடுங்கும் கடவுள் தேசம்
கேரளாவில் பல்வேறு வகையான காய்ச்சலுக்கு ஒரே நாளில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.கேரளாவில் கடந்த சில மாதங்களாக பல வகையான காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக டெங்கு, எலிகாய்ச்சல், காலரா, பன்றிக் காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு வகை காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த 11 பேர் உயிரிழந்தனர், மாநிலம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில், 12 ஆயிரத்து 200 பேர் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்றுள்ளனர். அவர்களில் 4 பேருக்கு எலிக்காய்ச்சலும், 173 பேருக்கு டெங்கு காய்ச்சலும், 4 பேருக்கு காலராவும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 44 பேருக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இந்நிலையில், சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், காய்ச்சலை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகளை பின்பற்றுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.