கேரளாவில் வெளுக்கும் பருவமழை.. - அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியின் ஆக்ரோஷ காட்சி...
கேரள மாநிலம் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. மாநிலத்தின் பல மாவட்டங்களில் கடந்த 4 தினங்களாக கனமழை கொட்டித் தீர்த்து வருவதால், நீர் நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. சாலக்குடி ஆற்றில் அதிக அளவில் தண்ணீர் செல்வதால், பொதுமக்கள் இறங்கவோ, வேடிக்கை பார்க்கவும் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Next Story