வெள்ளத்தில் மூழ்கிய அம்மன் சிலை... - நீந்தி வந்து பக்தர்கள் வினோத வழிபாடு...
கேரள மாநிலம் திருச்சூரில் மழைவெள்ளத்தில் மூழ்கிய அம்மன் சிலையை பக்தர்கள் தண்ணீரில் நீந்தி வந்து வழிபடும் ஆராட்டு விழா நடைபெற்றது.
திருச்சூர் நகரில் உள்ள தாணிக்குடம் கோயில் மூன்று பக்கமும் மழைநீர் கால்வாய்களால் சூழப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் தென்மேற்கு பருவமழை வெள்ளத்தில் கோயில் கருறையில் உள்ள அம்மன் சிலை மூழ்கும் தினத்தன்று ஆராட்டு விழா நடத்தப்படுவது வழக்கமாகும். அதன்படி, தற்போது மூன்று பக்கமும் வெள்ளம் கரைபுரண்டோடும் நிலையில் அம்மன் சிலை தண்ணீரில் மூழ்கி உள்ளது. இதையடுத்து, தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வெள்ள நீரில் நடந்தும், நீந்தியும் வந்து வழிபட்டு செல்கின்றனர்.
Next Story