தத்துக்கொடுத்த தாய்.. 44 வருடம் கழித்து தேடி வந்த பெண்.. 3வது முறை.. கண்கலங்க வைக்கும் பாசம்
நான்கு வயதில் பிரான்ஸ் தம்பதிக்கு தத்துக் கொடுக்கப்பட்ட பெண், தமது 48 வயது வயதில் பெற்றோரை தேடி மூன்றாவது முறையாக கேரளாவுக்கு வந்தார்.
கேரளாவில், குழந்தை பருவத்தில் பெற்றோரால் கைவிடப்பட்ட ரெஜினா, பத்தனம்திட்டா மாவட்டம், பாலக்காத்தக்கிடி பகுதியில் உள்ள செயிண்ட் ஜோசப் கான்வெண்டில் வளர்ந்துள்ளார். 1980-ம் ஆண்டு, தமது நான்காம் வயதில், பிரான்ஸ் நாட்டு தம்பதிக்கு தத்துக் கொடுக்கப்பட்டுள்ளார். பிரான்ஸ் நாட்டிலேயே வளர்ந்த ரெஜினா, அதே நாட்டைச் சேர்ந்த அர்னால்ட் டேனி என்பருடன் திருமணமாகி, 3 பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில், தமது உண்மையான பெற்றோரை தேடி கடந்த 2017-ம் தேதி கேரளா வந்த ரெஜினா, அவர்களை கண்டுபிடிக்க முடியாமல் பிரான்ஸ் திரும்பினார். பின்னர், இரண்டாம் முயற்சியும் தோல்வியில் முடிய, மூன்றாம் முறையாக தற்போது ரெஜினா கேரளா வந்தார். தமது குழந்தை பருவ புகைப்படங்கள் உள்ளிட்டவற்றை வைத்து, தமது பெற்றோரை தேடியும் கிடைக்காததால், மூன்றாம் முறையாக அவர் ஏமாற்றத்துடன் பிரான்ஸ் திரும்பிச் சென்றார்.