கேரள மருத்துவர் வந்தனா தாஸ் கொலை வழக்கு - தந்தை தெரிவித்த முக்கிய குற்றச்சாட்டு
கேரளா மாநிலம் கொல்லம் மருத்துவமனையில் கடந்த ஆண்டு மே மாதம் மருத்துவ பரிசோதனைக்கு போலீசாரால் அழைத்து வரப்பட்ட குற்றவாளி சந்தீப், தனக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் வந்தனா தாஸை கத்தரிக்கோலால் குத்தினார். இதில் வந்தனா தாஸ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வழக்கை கொல்லம் குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வரும் நிலையில், வந்தனா தாஸின் பெற்றோர், சி.பி.ஐ. விசாரணை கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். குற்றப்பிரிவு போலீஸ் விசாரணை திருப்திகரமாக இல்லை என்று கூறப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், சிபிஐ விசாரணை தேவையில்லை எனக் கூறி பெற்றோரின் மனுவை நிராகரித்துவிட்டது. இந்நிலையில், உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து டிவிஷன் பெஞ்சில் மேல்முறையீடு செய்யப்போவதாகவும், காவல்துறையை காப்பாற்ற அரசு முயற்சிப்பதாகவும், வந்தனா தாசின் தந்தை மோகன்தாஸ் தெரிவித்துள்ளார்.