திடீரென வந்த போன் கால்... எடுத்து பேசியதும் பதறிப்போன இளைஞர் - வெளியான பகீர் ஆடியோ
கேரளாவில் மாவட்ட ஆட்சியரின் பெயரில் போலி கணக்கு தொடங்கி பண மோசடியில் ஈடுபட முயன்ற வடமாநில கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்திற்கு உட்பட்ட அதிரப்பள்ளியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு, திருச்சூர் மாவட்ட ஆட்சியர் அர்ஜுன் பாண்டியனின் பெயரில் சமூக வலைதளத்தில் குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது. அதில், பெங்களூருவில் துணை ராணுவ வீரராக பணியில் இருக்கும் சுமித்குமார் என்பவர், பணி மாறுதலாகி செல்வதால், அவர் பயன்படுத்தி வரும் விலையுயர்ந்த ஃபர்னிச்சர்களை, வெறும் ஒரு லட்சத்து 15 ஆயிரம் ரூபாய்க்கு தர முன்வருவதாக கூறியுள்ளார். மேலும், அந்த இளைஞரை சுமித்குமார் என்ற பெயரில் செல்போனில் அழைக்கும் வட மாநிலத்தவர், பொருட்களை ராணுவ வாகனத்தில் இலவசமாக அனுப்பி வைப்பதாக தெரிவித்துள்ளார்.
இதனால் சந்தேகம் அடைந்த அந்த இளைஞர் போலீசில் புகார் அளித்த நிலையில், மாவட்ட ஆட்சியரின் பெயரில் பண மோசடியில் ஈடுபட முயன்ற வடமாநில கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.