கோலாகலமாக நடந்த கும்மாட்டிக்களி டான்ஸ் - ஜாலியாக VIBE செய்த மக்கள்

x

கேரளாவின் திருச்சூர் பகுதியில் கும்மாட்டிகளி நடன நிகழ்ச்சி நடத்தப்பட்டது. பூதகணங்களின் உருவம் பொருத்திய முகமூடியுடன், மருத்துவ குணம் கொண்ட கும்மாட்டி புல்லை அணிந்து, கலைஞர்கள், செண்டை மேளம், நாதஸ்வரம், பேண்ட் வாத்திய இசைக்கு ஏற்றபடி வீதிகளில் நடனமாடி உலா வந்தனர். சிவன், அனுமன், சுக்ரீவன், பிரம்மா என பல வேடங்களை அணிந்து கலைஞர்கள் வந்தனர். இதனை காண வந்த ஏராளமான சுற்றுலா பயணிகளும், அப்பகுதி பொதுமக்களும், உற்சாகத்துடன் இந்த கும்மாட்டிகளி நடனத்தை கண்டு ரசித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்