"இயக்குனர் ரஞ்சித் அதற்கான அறிகுறியில் என்னிடம் நடந்தார்" - பிரபல நடிகை கிளப்பிய பகீர்

x

மலையாள இயக்குநர் மீது வங்காள நடிகை பாலியல் குற்றச்சாட்டு முன்வைத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...கேரள மாநில திரைத்துறையில் பெண்களுக்கு இழைக்கப்படும் துன்புறுத்தல் தொடர்பாக ஆய்வு செய்த ஹேமா கமிட்டி வெளியிட்ட அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதற்கிடையே, வங்காள நடிகையான ஸ்ரீலேகா மித்ரா சில ஆண்டுகளுக்கு முன்பு பாலாரி மாணிக்கம் என்ற மலையாள திரைப்படத்தில் நடிப்பதற்காக கேரளா சென்றிருந்த போது இயக்குனரான ரஞ்சித் தன்னிடம் தரக்குறைவாக நடந்து கொண்டதாக தற்போது தெரிவித்துள்ளார்... தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தவில்லை என்றாலும்... அதற்கான அறிகுறி தென்படும் வகையில் நடந்து கொண்டதாக ரஞ்சித் மீது ஸ்ரீலங்கா மித்ரா குற்றம் சாட்டியுள்ளார். கேரள மாநில திரைப்பட அகாடமியின் தலைவராக செயல்பட்டு வரும் இயக்குனர் ரஞ்சித் மீது வங்காள நடிகை குற்றஞ்சாட்டி உள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும், கேரளாவைச் சார்ந்த பிரபல நடிகரான திலகனின் மகள் சோனியா திலகனும், தான் திரைத்துறையில் ஈடுபடாத நிலையிலும் தன்னிடம் கேரள திரைத்துறையை சேர்ந்த முக்கிய பிரமுகர் தரக்குறைவாக நடந்து கொண்டதாகவும் நேரம் வரும்போது, யார் என வெளிப்படுத்துவேன் எனவும் கூறியுள்ளார். இதே போன்று கேரள திரைத்துறையில் பல்வேறு நடிகைகள் தங்களுக்கு இழைக்கப்பட்ட துன்புறுத்தல்கள் தொடர்பாக கருத்துக்களை வெளிப்படுத்திய வண்ணம் உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்