செங்கல் மட்டுமே பயன்படுத்தி வடிவமைக்கப்பட்ட குளம்.. இளைஞனின் உழைப்பால் நெகிழ்ந்த மக்கள் | Kerala

x

கேரளாவில் ஓராண்டு கடினமாக உழைத்து இளைஞர் ஒருவர் அழகு வாய்ந்த கோவில் குளத்தை உருவாக்கியுள்ளார்... காசர்கோடு மாவட்டத்திற்கு உட்பட்ட காரியங்கோடு பகுதியைச் சேர்ந்த வினீஷ் நீலேஸ்வரம் பகுதியில் அமைந்துள்ள சாஸ்த மங்கலத்து அப்பன் சிவன் கோயிலுக்கு குளம் ஒன்றை உருவாக்கி உள்ளார். ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட செங்கல்கள் பயன்படுத்தப்பட்டு ஒரு துளி கூட சிமெண்ட் பயன்படுத்தாமல் 7 பணியாட்களின் உதவியுடன் தனது உழைப்பை செலுத்தி 16 மீட்டர் ஆழமும் 60 மீட்டர் நீளமும் கொண்ட குளத்தை உருவாக்கியுள்ளார். இந்த குளத்தின் அழகைக் கண்டு காசர்கோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து 5 கோயில்களுக்கு குளங்கள் உருவாக்க வேண்டும் என்ற வேண்டுகோள்கள் வைக்கப்பட்டுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்