தொடர் மழை... வெள்ளக்காடாக காட்சி அளிக்கும் கேரளா - அச்சத்தில் மக்கள்

x

கேரள மாநிலம் கொல்லம், எர்ணாகுளம், கோட்டயம், பத்தனம்திட்டா, ஆலப்புழா உள்ளிட்ட மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ள நிலையில், கனமழை கொட்டி வருகிறது. கொச்சி, எர்ணாகுளம், ஆலப்புழா உள்ளிட்ட பகுதிகள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. வேளாண் நிலங்கள், சாலைகள், ரயில் தண்டவாளங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. வேங்ஙூர் ஐகாரக்குடி பகுதியில் குளிப்பதற்காக தண்ணீரில் இறங்கிய பத்தாம் வகுப்பு மாணவன் மழை நீரில் மூழ்கி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவனந்தபுரத்தில் மழை தொடர்வதால் அருவிக்கரை அணையில் கூடுதல் தண்ணீர் வெளியேற்றப்படுவதாக அரசு தெரிவித்துள்ளது. மேலும் பாதுகாப்பு காரணங்களுக்காக பெரும்பாலான சுற்றுலா தலங்களும் மூடப்பட்டுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்