உயிர் பலிவாங்க ஆரம்பித்த நிபா வைரஸ்.. பறிபோன மாணவன் உயிர் - 240 பேர் நிலை என்ன?
கேரளமாநிலம் மலப்புரத்தில் நிபா வைரஸ் தாக்குதலுக்கு சிகிச்சை பெற்று வந்த 14 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த சிறுவன் சக மாணவர்களோடு சுற்றுலா சென்ற போது சாப்பிட்ட உணவிலிருந்து நிபா வைரஸ் தாக்குதல் ஏற்பட்டிருக்கலாம் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். அந்த மாணவனுடன் தொடர்பில் இருந்தவர்களின் பட்டியலை தயாரித்து அவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Next Story