கேரளாவை அலறவிடும் நிபா வைரஸ்..மிஸ் பண்ணா அடுத்து தமிழகம் தான்.. எல்லையில் அதிரடி காட்டும் அதிகாரிகள்

x

கேரளாவில் நிபா வைரஸ் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்த நிலையில், தமிழக- கேரள எல்லை பகுதியில் சுகாதார துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

மலப்புரம் மாவட்டத்தில் நிபா வைரஸ் தாக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து, அவருடன் தொடர்பில் இருந்த நபர்களுக்கு நிபா வைரஸ் பாதிப்பு உள்ளதா என்பது குறித்து பரிசோதனை நடத்தப்படுகிறது. இதனிடையே, கேரளாவை ஒட்டியுள்ள கோவை, திருப்பூர், நீலகிரி, கன்னியாகுமரி, நாகர்கோயில், தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களின் எல்லையோர சோதனை சாவடிகளில் சுகாதாரத் துறையில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

கோவையை அடுத்த வாளையார் சோதனை சாவடியில் நிபா வைரஸ் பரிசோதனை முகாம் நடத்தப்படுகின்றது.


Next Story

மேலும் செய்திகள்