கேரளாவையே நடுங்கவிட்ட சிறுவன் மரணம்..அடுத்த தலைவலி.. பீதியில் மக்கள்
கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் சேகரிக்கப்பட்ட வவ்வால் மாதிரிகளில் நிபா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் கடந்த ஜூலை 21-ந்தேதி நிபா வைரஸ் பாதிப்பால் 14 வயது சிறுவன் உயிரிழந்தான். இதையடுத்து அம்மாவட்டத்தில் உள்ள பாண்டிக்காடு 5 கிலோ மீட்டர் சுற்றளவில் 27 பழ வவ்வால்கள் சேகரிக்கப்பட்டு, ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. அவற்றில் 6 வவ்வால்களில் நிபா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். நிபா வைரஸ் பாதிக்கப்பட்டவருடன் தொடர்பு பட்டியலில் இருந்தவர்களுக்கு நிபா நெறிமுறையின்படி, சோதனைகள் நடத்தப்பட்ட நிலையில், அவர்களுக்கு தொற்று இல்லை என்று தெரியவந்துள்ளதாகவவும் அவர் குறிப்பிட்டார்.
Next Story