வெடித்த பாலியல் பிரளயம்.. மோகன்லாலுக்கு அதிர்ச்சி கொடுத்த டோவினோ தாமஸ்
கேரள நடிகர் சங்க அமைப்பிலிருந்து முன்னணி நடிகர் உட்பட நான்கு பேர் இதுவரை ராஜினாமா கடிதம் சமர்ப்பிக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.கேரள திரையுலகில் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளன. கேரள நடிகர் சங்கமான அம்மா அமைப்பின் பொதுச்செயலாளர் சித்திக் உள்ளிட்ட நிர்வாகிகள் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து நடைபெற்ற ஆன்லைன் செயற்குழு கூட்டத்தில் காரசார விவாதம் ஏற்பட்டது. தலைவர் மோகன்லால் உள்ளிட்ட நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் என 17 பேர் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்வதாக அறிவித்தனர். இதற்கான ராஜினாமா கடிதத்தை பெரும்பாலானோர் சமர்ப்பித்த நிலையில், முன்னணி நடிகரான டோவினோ தாமஸ், வினோ மோகன், நடிகைகள் அனன்யா, சரயு என 4 பேரும் இதுவரை ராஜினாமா கடிதத்தை சமர்ப்பிக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. கூட்டாக மேற்கொண்ட ராஜினாமா முடிவில் இவர்களுக்கு உடன்பாடு இல்லை என்றும் கூறப்படுகிறது. அம்மா அமைப்பிற்குள் இருவிதமான கருத்துக்கள் நிலவுவதால் தொடர்ந்து அந்த அமைப்பு இயங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.