மலையாள நடிகரின் பதவிக்கு வினையாகும் பாலியல் குற்றச்சாட்டு

x

கேரளாவில் நடிகர் முகேஷ் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என போராட்டம் வலுத்து வருகிறது.

நடிகரும் எம்.எல்.ஏவுமான முகேஷ் மீது நடிகை ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் முகேஷ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து கடந்த 2 நாட்களாக அவர் பதவி விலக வேண்டும் எனக்கூறி பல்வேறு கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கொல்லத்தில் உள்ள அவரது அலுவலகத்தை முற்றுகையிட காங்கிரஸ் மகளிர் அணியினர் முயன்றனர். இதில் போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து, போராட்டாக்காரர்களை போலீசார் குண்டு கட்டாக தூக்கி சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்