முதலில் கத்தி இப்போ துப்பாக்கி - கேரளாவில் பதற்றம்

x

கேரளாவில், மீண்டும் மாவோயிஸ்ட் நடமாட்டம் அதிகரித்திருப்பதால், போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கேரள மாநிலம் வயநாடு, பாலக்காடு, இடுக்கி கண்ணூர் மாவட்டங்களில் உள்ள வனப்பகுதிகளில் மாவோயிஸ்ட் நடமாட்டம் அதிக அளவில் உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு வயநாடு மாவட்டம் கம்பமலை அருகே உள்ள தலப்புழா பகுதியில் திடீரென ஊருக்குள் வந்த ஆயுதம் ஏந்திய மாவோயிஸ்ட், வனத்துறை அலுவலகத்தை சூறையாடியது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் மீண்டும் அதே பகுதியில் துப்பாக்கி ஏந்திய மாவோயிஸ்ட்டுகள் வந்து சென்றதால், போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்