மரண ஓலங்கள் ஒலித்த வயநாட்டில் அடுத்த அதிர்ச்சி - அரசுக்கு எதிராக திரும்பியதால் பரபரப்பு
மரண ஓலங்கள் ஒலித்த வயநாட்டில் அடுத்த அதிர்ச்சி - அரசுக்கு எதிராக திரும்பியதால் பரபரப்பு
நிலச்சரிவு ஏற்பட்ட வயநாட்டில் புதிதாக நகரியம் அமைத்திட தனியார் எஸ்டேட்டுகளை கையகப்படுத்தும் கேரள அரசின் திட்டத்திற்கு எதிராக கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது...கேரளா மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பான வசதியை ஏற்படுத்தும் வகையில் புதிய நகரியம் அமைக்கும் திட்டத்தை கேரள அரசு வகுத்துள்ளது. அதற்காக வயநாட்டிலுள்ள நெடும்பாலா எஸ்டேட்டில் 65.41 ஹெக்டேர் மற்றும் கல்பற்றா எல்ஸ்டன் எஸ்டேட்டில் 78.73 ஹெக்டேர் நிலமும் கையகப்படுத்த திட்டமிட்டுள்ளது. அதை எதிர்த்து எஸ்டேட் நிர்வாகங்கள் கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளன. நிலச்சரிவால் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் பல தொழிலாளர்கள் உயிரிழந்ததாகவும் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ள தங்களுக்கு போதிய இழப்பீடு வழங்காத நிலையில், அரசின் தங்கள் நிலம் கையகப்படுத்தும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது. இந்த மனு அடுத்த மாதம் 4ம் தேதி விசாரணைக்கு வருகிறது.