"2வது திருமணம் செல்லாது ஆனால்.." - கேரள ஐகோர்ட் எதிர்பாரா தீர்ப்பு

x

இரண்டாவது திருமணத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு தந்தையின் சொத்தில் உரிமையும், சட்டப்பூர்வ வாரிசு சான்றிதழும் பெற உரிமை உள்ளதாக கேரள உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கோழிக்கோட்டைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது கணவரின் ஓய்வூதியப் பலன் மற்றும் சட்டப்பூர்வ வாரிசு சான்றிதழ் கோரி தாக்கல் செய்த மனு விசாரணைக்கு வந்தது.

அப்போது, சட்டப்பூர்வ முதல் திருமணத்தின்போது இரண்டாவது திருமணம் செல்லாது என்றாலும்,

அந்தத் திருமணத்தில் பிறந்த குழந்தைகளுக்கு பெற்றோரின் சொத்துரிமை மற்றும் சட்டப்பூர்வ வாரிசு சான்றிதழ் ஆகியவற்றுக்கு உரிமை உண்டு என ஒற்றை பெஞ்ச் தீர்ப்பளித்தது.

சட்டப்படி திருமணம் செய்யாமல் கணவர் இருக்கும் மனைவிக்கு தனது கணவரின் சொத்துக்கான உரிமை அல்லது சட்டப்பூர்வ வாரிசு சான்றிதழுக்கான உரிமை இல்லை என்றும் தெரிவித்தது.

இறந்தவரின் மனைவி மற்றும் முதல் திருமணத்தில் உள்ள குழந்தைகள், அவரது சொந்த தாய் மற்றும் இரண்டாவது திருமணத்தில் உள்ள குழந்தைகளுக்கு ஓய்வூதிய பலன்களை மட்டும் வழங்கவும், சட்டப்பூர்வ வாரிசு சான்றிதழ் வழங்கவும் உத்தரவிட்டது.


Next Story

மேலும் செய்திகள்