சட்டங்களுக்கு இந்தி, சமஸ்கிருத பெயர்கள் - "மத்திய அரசின் அறிவிப்பால் அதிர்ச்சி"

x

அரசியலமைப்பு சட்டங்களுக்கு இந்தி மற்றும் சமஸ்கிருதத்தில் பெயர் சூட்டும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிராக, கேரள உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம், சாட்சிய சட்டம் ஆகியவற்றை, பாரதீய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, பாரதீய சாக்ஷ்யா என மத்திய அரசு பெயர் மாற்றம் செய்துள்ளது. இந்த பெயர் மாற்றம் ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அரசியலமைப்புச் சட்டம் இந்தி மொழியை தேசிய மொழியாகக் குறிப்பிடவில்லை என்று கேரள உயர்நீதிமன்றத்தில், வழக்கறிஞர் பி.வி.ஜீவேஷ் என்பவர் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். அதில், ஆங்கிலத்தை சட்ட மொழியாகவும், உயர் நீதிமன்ற மொழியாகவும் இருக்க வேண்டும் என அரசியல் நிர்ணய சபை முடிவு செய்துள்ளதாகவும், அதனால்தான் அரசியலமைப்புச் சட்டத்தில் 348வது பிரிவு எழுதப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைகள், மொழிவழி அத்துமீறல் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த பெயர் மாற்ற நடவடிக்கை, அரசியல் சாசனத்திற்கு எதிரானதாக அறிவிக்க, மத்திய சட்ட அமைச்சகத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. இந்த மனுவை தலைமை நீதிபதி அடங்கிய டிவிஷன் பெஞ்ச் இன்று விசாரிக்க உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்