85 வயது பாட்டி கேட்ட ஒரு வார்த்தை.. உடனே கனவை நனவாக்கிய ஐகோர்ட்... கடவுள் தேசத்தில் கடவுளான நீதிபதி

x

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம், காக்கநாடு நகரை சேர்ந்த 85 வயது மூதாட்டி தாக்கல் செய்த மனுவில், கணவர் மற்றும் மகனை இழந்து ஆதரவற்று தவிப்பதாகத் தெரிவித்துள்ளார். தனக்கு சொந்தமான 81 சென்ட் நிலம் தண்ணீரில் மூழ்கியதாகவும், அதை மீட்டுத்தர கோரியபோது, சுற்றுச்சூழல் பாதிக்கும் எனக்கூறி நிலத்தை தன்னிடம் ஒப்படைக்க வேளாண் அதிகாரிகள் மறுத்துவிட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார். ஆதரவற்றோர் இல்லத்தில் வசித்து வரும் நிலையில், அந்த நிலத்தை மீட்டுத்தந்தால், உள்ளூர் மக்கள் உதவியுடன் சொந்தமாக வீடு கட்டிக் கொள்வதாகவும் கூறியிருந்தார். மனுவை விசாரித்த நீதிபதி, முதியோர்களை பராமரிப்பது நம் அனைவரின் பொறுப்பு... அவரது ஆசையை மதிக்க வேண்டுமென தெரிவித்தார். மூதாட்டியின் 81 சென்ட் நிலத்தில், 10 சென்ட் நிலத்தையாவது அவருக்கு வீடு கட்ட வேளாண் அதிகாரிகள் ஒதுக்க வேண்டும் என்றும், 3 வாரங்களுக்குள் நிலத்தில் ஒரு பகுதியை வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்